ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையிலான மற்றுமொரு கலந்துரையாடல் இன்றிரவு இடம்பெறவுள்ளது.
எவ்வாறாயினும் இந்த கலந்துரையாடல் நடைபெறவுள்ள இடம் தொடர்பான தகவல்கள் இதுவரையில் வெளியாகவில்லை.
இதற்கு முன்னர் இரு கட்சிகளினதும் பிரதிநிதிகளுக்கிடையே இடம்பெற்ற கலந்துரையாடல்கள் தொடர்பில் கட்சிகளின் தலைவர்கள் கொண்டுள்ள நிலைப்பாடு தொடர்பில் இன்றைய தினம் கலந்துரையாடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் குழுவொன்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுடன் குறித்த யோசனை தொடர்பில் இன்று கலந்துரையாடவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.




