குறைக்கப்பட்ட மின்சாரக் கட்டணத்தின் சலுகை பொதுமக்களை முறையாகச் சென்றடைகின்றதா? என்பது தொடர்பில் ஆராய்வதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நாளை மறுதினம் இடம்பெறவுள்ளதாக ஆணைக்குழுவின் தொடர்பாடல் பணிப்பாளர் ஜயநாத் ஹேரத் எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார்.
இதில் பங்கேற்குமாறு இலங்கை வணிக சபை, வர்த்தக மற்றும் கைத்தொழில் சபைகளின் கூட்டமைப்பு, இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம், இலங்கை தேசிய கைத்தொழில் சபை, கட்டுமான தொழில் சபை மற்றும் ஒருங்கிணைந்த ஆடை சங்கங்களின் கூட்டமைப்பு ஆகியவற்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த 17ஆம் திகதி நள்ளிரவு முதல் அமலாகும் வகையில் எதிர்வரும் 6 மாதங்களுக்கு மின்சாரக் கட்டணத்தை 20 சதவீதத்தால் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




