மொனராகலை – மெதகம பகுதியில் பாதுகாப்பற்ற கிணற்றில் வீழ்ந்து குழந்தை ஒன்று உயிரிழந்தது.
ஒரு வயதும் இரண்டு மாதங்களும் ஆன குழந்தையொன்றே இவ்வாறு உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
தந்தை வேறொரு இடத்தில் பணிபுரிந்து வரும் நிலையில், குறித்த குழந்தை தாய் மற்றும் பாட்டியுடன் வசித்து வந்துள்ளது.
தாய்ப்பால் கொடுத்த நிலையில் தாய் உறங்கியதாகவும்,பின்னர் குழந்தையை தேடிய போது அது கிணற்றில் விழுந்திருப்பதை தாய் கவனித்ததாகவும் விசாரணை ஊடாக தெரியவந்துள்ளது.
இந்தநிலையில், குழந்தையை மீட்டு மெதகம பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போதிலும், குழந்தை ஏகனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.




