தொல்பொருள் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது

Date:

பழங்காலப் பொருட்களை பெறும் நோக்கில் சட்டவிரோதமாக அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேகநபர்கர் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வெலிகந்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகஸ்தென்ன பிரதேசத்தில் வெலிகந்த பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (2) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 47 மற்றும் 50 வயதுடைய வெலிகந்த பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் இருந்து அகழ்வு நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகந்த பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....