18 பந்தில் அரைசதம்.. 4 விக்கெட்.. ருத்ர தாண்டவமாடிய இலங்கை வீரர்

Date:

லங்கா பிரீமியர் லீக் தொடரில் பி-லவ் கண்டி அணி 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பல்லேகலவில் நடந்த போட்டியில் பி-லவ் கண்டி மற்றும் காலி டைட்டன்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய பி-லவ் கண்டி அணி 5 விக்கெட் இழப்புக்கு 203 ஓட்டங்கள் குவித்தது.

அதிரடியில் மிரட்டிய அணித்தலைவர் வணிந்து ஹசரங்க 18 பந்துகளில் அரைசதம் விளாசினார். அவர் 27 பந்துகளில் 2 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 64 ஓட்டங்கள் குவித்தார்.

பக்ஹர் ஜமான் 45 ஓட்டங்களும், ஏஞ்சலோ மேத்யூஸ் 40 ஓட்டங்களும் எடுத்தனர்.

பின்னர் களமிறங்கிய காலே டைட்டன்ஸ் அணி ஹசரங்கா, நுவன் பிரதீப், முஜீப் உர் ரஹ்மான் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 114 ஓட்டங்களுக்கு சுருண்டது.

அதிகபட்சமாக லஹிரு சமரக்கூன் 36 ஓட்டங்களும், அக்ஷன் பிரியன்ஜன் 25 ஓட்டங்களும் எடுத்தனர்.

மாயாஜால சுழலில் மிரட்டிய ஹசரங்கா 17 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகள் சாய்த்தார்.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

முதல் 7இல் வெறும் 1.. அடுத்த 7இல் 6.. கம்பேக்கில் மேஜிக் நிகழ்த்திய ஆர்சிபி.. வேறு யாரும் செய்யாத 2 சாதனை

உச்சக்கட்டத்தை தொட்டுள்ள ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் 68வது லீக்...

கங்குவா தீபாவளிக்கு வெளியாகிறதா?

தென்னிந்திய திரையுலகில் புகழ்பெற்ற நடிகர் சூர்யா தற்போது 'கங்குவா' என்ற படத்தில்...