திடீர் ஓய்வை அறிவித்தார் அவுஸ்திரேலிய வீரர் மார்கஸ் ஸ்டோய்னிஸ்!

Date:

ஒருநாள் சர்வதே கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அவுஸ்திரேலிய அணியின் சகலதுறை ஆட்டக்காரர் மார்கஸ் ஸ்டோய்னிஸ் அறிவித்துள்ளார். 

35 வயதான இவர், தற்போது நடைபெற்று வரும் தென்னாப்பிரிக்க இருபதுக்கு 20 போட்டியில் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். 

2025 ஐசிசி சாம்பியன்ஸ் கிண்ணத்திற்கு முன்னதாக மார்கஸ் ஸ்டோய்னிஸ் இந்த முடிவை எடுத்துள்ளமை அவரது இரசிகர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அவுஸ்திரேலியாவுக்காக 74 ஒருநாள் போட்டிகளில் இவர் விளையாடியுள்ளார். 

2025 ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரில் அவுஸ்திரேலிய அணிக்குழாமில் இவரது பெயர் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....