பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் உடல்நலக்குறைவு காரணமாக ரோமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
88 வயதான பாப்பரசர் ஏற்கனவே வயிற்றுப் பகுதியில் பல அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பாப்பரசர் பல ஆண்டுகளாகச் சுவாசக் கோளாறு காரணமாகச் சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.
பரிசுத்த பாப்பரசர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், அடுத்த 3 நாட்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்து கூட்டங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.




