சம்பியன்ஸ் டிராபியில் அர்ஷ்தீப், ஹர்ஷித் இருவரில் விளையாட போவது யார்?

Date:

ஐ.சி.சி. சம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் டுபாயில் நடத்தப்படுகிறது. நாளை மறுதினம் (புதன்கிழமை) பிற்பகல் 2.30 மணிக்கு கராச்சியில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில் இந்த தொடர் முழுவதும் இந்திய அணியின் ஆடும் அணியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகம்மது சமி இடம் பெறுவார் என்று தெரிகிறது. ஆனால் 2 ஆவது வேகப்பந்து வீச்சாளர் இடத்திற்கு அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்ஷித் ராணா இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

இந்நிலையில் பங்களாதேஷிற்கு எதிரான முதல் போட்டிக்கான இந்தியாவின் ஆடும் அணியில் 2 ஆவது வேகப்பந்து வீச்சாளராக அர்ஷ்தீப் சிங் இடம் பெறுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அவர் இடது கை பந்துவீச்சாளர் என்பதால் ராணாவை தாண்டி அவருக்கு வாய்ப்பு கொடுக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....