அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு 3 பேர் உயிரிழப்பு!

Date:

அமெரிக்காவில் மர்மநபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. தனி நபர்கள் துப்பாக்கி வைத்திருக்க அரசு அனுமதிக்கிறது. அதை பயன்படுத்துவதற்கும் எண்ணற்ற கட்டுப்பாடுகள் உள்ளன. 18 வயதுக்குட்பட்ட தனிநபர்கள், தண்டனை பெற்ற குற்றவாளிகள் மனநலம் குன்றியவர்கள் உள்ளிட்டோர் துப்பாக்கி வைத்திருக்க தடையும் உள்ளது. ஆனாலும் பல்வேறு இடங்களில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

இந்நிலையில், கெண்டகி மாகாணம் லுயிஸ்வெலி பகுதியில் ஓட்டுனர் உரிமம் பதிவு அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் வாகனம் நிறுத்தும் இடம் அருகே சிலர் நின்றுகொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த நபர் திடீரென அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பி ஓடினார். இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இருவர் பலத்த காயம் அடைந்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றவர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....