3-3-2025 தேவதை நாள்

Date:

சில ஏஞ்சல் எண்கள் ஒன்றாக சேர்ந்து வரக்கூடிய நாளை தேவதை நாள், பிரபஞ்ச வசிய நாள் என்று சொல்லுவார்கள். அப்படிப்பட்ட பிரபஞ்ச வசிய நாள் தான் நாளைய தினம் வரவிருக்கிறது. 3-3-2025க்குள் மறைந்திருக்கும் அந்த ஏஞ்சல் நம்பர் என்ன.

நாளைய தினம் இந்த பிரபஞ்சத்திடம் நாம் எப்படி எல்லாம் வேண்டுதல் வைத்தால், நமக்கான நல்லது நடக்கும் என்பதை பற்றிய விரிவான தகவலைத்தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். பிரபஞ்சத்தில் பரவி இருக்கும் நேர்மறை ஆற்றலின் மீதும், வசிய எண்களின் மீதும், ஏஞ்சல் நம்பரின் மீதும் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் மட்டும் இந்த பதிவை தொடர்ந்து படியுங்கள். நம்பிக்கை இல்லாமல் இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் எந்த பலனும் கிடையாது.

உங்கள் வாழ்க்கையில் இருக்கும் தீராத எந்த பிரச்சனை தீர வேண்டும் என்றாலும் சரி. இந்த பரிகாரத்தை செய்யலாம். அதற்கு முன்பு இந்த நாளுக்கு பின்னால் மறந்திருக்கும் அந்த ஆச்சரியம் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா.

369 ஏஞ்சல் நம்பர் 369 இது ஒரு வசிய எண்.

ஏஞ்சல் நம்பர். வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு இந்த நம்பர் நிச்சயம் உதவியாக இருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. நீங்கள் ஆசைப்படும் விஷயத்தை உங்கள் கையில் கொண்டு வந்து சேர்க்கும் நம்பர் இது. நிறைய செல்வத்தைக் கொண்டு வந்து சேர்க்க கூடிய வேலையை இந்த நம்பர் செய்யும். உங்களுக்கான பாதுகாப்பை இந்த நம்பர் கொடுக்கும். நிறைய சந்தோஷத்தையும் அள்ளிக் கொடுக்கக்கூடிய சக்தி இந்த நம்பருக்கு பின்னால் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.

இந்த நம்பருக்கு பின்னால் என்ன இருக்கிறது என்பதை ஆராய்ச்சி செய்து பார்க்காமல், இந்த நம்பரை எழுதி பிரபஞ்சத்திற்கு நன்றி சொன்னால், நல்லது மட்டுமே நடக்கும் என்று முழு நம்பிக்கை வையுங்கள். நாளைய தினம் 3-3-2025 இந்த நாளில் மறைமுகமாக இந்த 369 என்ற எண் மறைந்திருக்கிறது. 3 என்பது நாளைய தேதி. தேதியையும் மாதத்தையும் கூட்டினால், 6 என்ற எண் வருகிறது. வருடத்தின் கூட்டுத்தொகை 9. இந்த நாளில் நம்முடைய ஆசைகள் நிறைவேற என்ன பரிகாரம் செய்யலாம்.

நாளை அதிகாலை 3:00 மணிக்கு இந்த பரிகாரத்தை செய்யலாம். தவறவிட்டவர்கள் மதியம் 3 மணிக்கு இந்த பரிகாரத்தை செய்யலாம். ஒரு வெள்ளை காகிதத்தை எடுத்துக் கொள்ளுங்கள். முதல் 3 முறை “பிரபஞ்சத்திற்கு நன்றி” என்ற வார்த்தையை எழுதுங்கள். பிறகு உங்களுடைய குறிக்கோள் என்ன என்பதை 3 முறை எழுத வேண்டும்.

உதாரணத்திற்கு அடமானத்தில் இருக்கும் நகை மிக்க வேண்டும், கடன் சுமை குறைய வேண்டும், நல்ல வேலை கிடைக்க வேண்டும், கணவருக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும், நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும், சொந்த வீடு வாங்க வேண்டும், இப்படி என்ன தேவை உங்களுக்கு இருக்கிறதோ, அதிலிருந்து ஒரே ஒரு தேவையை மட்டும் மூன்று முறை எழுதிவிட்டு, பிறகு 33 முறை “369” என்ற நம்பரை எழுதுங்கள்.

ஒரு வெள்ளை காகிதத்தில், அல்லது டைரி நோட்டுப் புத்தகம் எது இருந்தாலும், மேலே சொன்ன வரிசையில் உங்களுடைய கோரிக்கைகளை எழுதி அந்த வெள்ளை பேப்பரை மடித்து உள்ளங்கைகளில் வைத்துக்கொண்டு, முழு நம்பிக்கையோடு நீங்கள் எழுதிய அந்த விஷயம் நடந்தே தீரும் என்று நம்பினாலே போதும். அந்த நம்பிக்கையே உங்கள் வாழ்க்கையில் நல்லதை கொண்டு வந்து சேர்த்துவிடும். அந்த பேப்பரில் எழுதிய விஷயங்களானது கூடிய சீக்கிரத்தில் பலிக்க துவங்கிவிடும். உங்கள் பரம்பரையே செல்வ செழிப்பில் அந்த வானளவு உயர வேண்டும் என்றும் எழுதலாம். நிச்சயம் நடக்கும்.

இந்த நம்பரை பயன்படுத்தி பல நபர்கள், பல பிரச்சனைகளில் இருந்து வெளிவந்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. நம்பிக்கை மட்டுமே மூலதனமாக இருக்க வேண்டும். வேறு எதுவும் வேண்டாம். நம்பிக்கை இருந்தால் இந்த நம்பரை வைத்து நீங்கள் இந்த உலகத்தையே ஜெயித்து விடலாம். இந்த அரிய தகவலை உங்களோடு பகிர்ந்து கொண்டதில் மனமகிழ்ச்சியுடன் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....