ஸ்ரேயா கோஷலின் எக்ஸ் தளம் ஊடுருவல்!

Date:

பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷலின் எக்ஸ் தள பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி முதல் தனது எக்ஸ் தள பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக அவர் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதில் கடந்த பெப்ரவரி 13 ஆம் திகதி முதல் எனது எக்ஸ் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது என்பதை எனது ரசிகர்கள் மற்றும் நண்பர்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்” எனப் பதிவிட்டிருந்தார்.

மேலும், தனது கணக்கில் பதிவிடப்படும் எந்தவொரு பதிவு, கருத்து, செய்தி அல்லது அறிவிப்புக்கும் யாரும் பதிலளிக்க வேண்டாம் என ஸ்ரேயா கோஷல் தெரிவித்துள்ளார்.

தனது கணக்கு மீட்டெடுக்கப்பட்டதும், அதைப் பற்றி ஒரு காணொளி மூலம் மக்களுக்குத் தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....