போப் பிரான்சிஸ் உடல் நிலையில் மீண்டும் பின்னடைவு

Date:

கத்தோலிக்க கிறிஸ்தவ மத தலைவரான போப் பிரான்சிஸ் (வயது 88) சுவாசப் பிரச்சினை காரணமாக கடந்த 14-ம் திகதி ரோம் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சுவாச பாதையில் தொற்று ஏற்பட்டு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் தொடர் சிகிச்சையில் இருந்து வருகிறார்.

இடையில் அவரது உடல்நிலையில் சற்றே முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில் தற்போது மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. சுவாசப் பாதையில் பாதிப்பு ஏற்பட்டதால் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கும் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. அவர் உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இது குறித்து வாடிகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “போப் பிரான்சிஸுக்கு ஒரே நேரத்தில் மூச்சுக் குழாயின் 2 இடங்களில் பாதிப்பு ஏற்பட்டதால், மீண்டும் செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....