பெருந்தொட்ட தொழிலாளர்களுக்கான வேதன விடயத்தில் ஆட்சியமைப்பதற்கு முன்னர் ஒரு கருத்தையும் ஆட்சி அமைத்ததன் பின்னர் மற்றுமொரு கருத்தையும் தற்போதைய அரசாங்கம் முன்வைப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.
நாடாளுமன்றில் இன்று நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.
தேர்தலை இலக்காகக் கொண்டு செயற்படும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் பெருந்தோட்ட மக்களை ஏமாற்றியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.
அதேநேரம், நாடாளுமன்றில் கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன், வேதன விடயத்தில் பெருந்தோட்ட தொழிலாளர்கள் பாரிய சவால்களை எதிர்கொள்வதாகத் தெரிவித்தார்.
கடந்த அரசாங்கங்களைப் போன்று தற்போதைய அரசாங்கமும் பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதன விடயத்தில் சிபாரிசு மாத்திரமே முன்வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் அண்மையில் நானுஓயாவில் கருத்துரைத்த பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனத்தினது பேச்சாளர் ரொஷான் இராஜரை, இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் தங்களுடன் கலந்துரையாடவில்லை எனக் குறிப்பிட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் சுட்டிக்காட்டினார்.




