சட்டவிரோத மின்வேலியில் தாயும் ஐந்து வயது குழந்தையும் பலி

Date:

அம்பாந்தோட்டை சூரியவெவ வீரியகம பகுதியில் வசித்து வந்த ஒரு தாயும் அவரது ஐந்து வயது குழந்தையும் மாலை அண்டை வீட்டில் போடப்பட்டிருந்த அங்கீகரிக்கப்படாத மின்சார கம்பியில் சிக்கி உயிரிழந்தனர்.

பொலிஸார் விசாரணை
இறந்த குழந்தை தனது வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு வீட்டிற்கு சிறு குழந்தைகள் பயன்படுத்தும் மிதிவண்டியில் சென்று கொண்டிருந்தபோது, சட்டவிரோத மின் கம்பியில் சிக்கிக் கொண்டதாகவும், தனது மகனைக் காப்பாற்ற சம்பவ இடத்திற்கு ஓடிய தாயும் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மின்சாரம் தாக்கி தாயும் மகனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இறந்தவர்கள் 38 வயது தாயும் அவரது 5 வயது மகனும் ஆவர்.

குறித்து சம்பவம் தொடர்பில் சூரியவெவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....