நாட்டை நோக்கிப் படையெடுக்கும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்!

Date:

நாட்டுக்குப் பிரவேசிக்கும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இதன்படி, இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 530,746 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்குப் பிரவேசித்துள்ளனர்.

பெப்ரவரி மாதத்தில் மாத்திரம் 240,217 பேர் நாட்டுக்கு வந்துள்ளனர்.

மார்ச் மாதத்தில் இதுவரையான காலப்பகுதியில் 37,768 சுற்றுலாப்பயணிகள் வந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்த மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் ரஸ்யாவில் இருந்து 5,768 பேரும் இந்தியாவிலிருந்து 5 ,373 பேரும் நாட்டுக்குப் பிரவேசித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவிலிருந்து 3,847 பேரும், ஜேர்மனியிலிருந்து 3,381 சுற்றுலாப் பயணிகளும் வந்துள்ளனர்.

மேலும், பிரான்சிலிருந்து 2,612 பேரும், சீனாவிலிருந்து 1,922 சுற்றுலாப் பயணிகளும் வந்துள்ளனர்.

ஏனைய நாடுகளிலிருந்து 10,913 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....