பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,700 ரூபாய் வேதனம் பெற்றுத்தரப்படும் என பல்வேறு தரப்பினராலும் முன்வைக்கப்படும் கருத்துகள் சாத்தியமற்றவை என நுவரெலிய மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
ஹட்டன் – செனன் தோட்டத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், பெருந்தோட்டங்களை பிரித்துக் கொடுத்து அங்குள்ள மக்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக மாற்ற வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.




