நிறுத்தி வைத்தல் வரிக்கு எதிராக சரித் அசலங்க – தனஞ்சய டி சில்வா மனு தாக்கல்!

Date:

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் வீரர்களை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் ஊழியர்களாகக் கருதி, அவர்கள் மீது வரியை விதிப்பதற்கு உள்நாட்டு இறைவரி திணைக்களம் எடுத்துள்ள தீர்மானத்தை இரத்துசெய்யுமாறு உத்தரவிடக்கோரி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவர் சரித் அசலங்க மற்றும் இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் தனஞ்சய டி சில்வா ஆகியோர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.

மனுவின் பிரதிவாதிகளாக உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம், அதன் பிரதி ஆணையாளர், ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

1996 ஆம் ஆண்டு உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்குப் பின்னர் தேசிய கிரிக்கெட் வீரர்கள், ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்துடன் ஒப்பந்த அடிப்படையில் செயற்படும் நடைமுறை பின்பற்றுவதாவதாக மனுதார்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தநிலையில், கடந்த ஜனவரி 17 ஆம் திகதி கூடிய ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் நிர்வாக சபை, ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுடன் ஒப்பந்தத்தின் கீழ் தேசிய மட்டத்தில் விளையாடும் வீரர்களை தங்களுடன் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்களாக வகைப்படுத்த முடிவு செய்ததாக மனுதாரர்கள் கூறுகின்றனர்.

இது தொடர்பாக சட்ட நிபுணர்களிடம் சட்ட ஆலோசனை கேட்டதாகவும், தாங்கள் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் சுயாதீன சேவை வழங்குநர்கள் எனவும் அதன் ஊழியர்கள் அல்ல எனவும் சட்ட ஆலோசனை பெற்றுள்ளதாகவும் மனுதாரர்கள் கூறுகின்றனர்.

இத்தகைய, சூழ்நிலையில், உள்நாட்டு இறைவரி திணைக்களம் தங்களை ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் ஊழியர்களாகக் கருதி வரியை விதிக்க முடிவு செய்துள்ளதாகவும், இது தேசிய அளவிலான கிரிக்கெட் வீரர்களுக்குக் கடுமையான பாதகத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும் மனுதாரர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அதன்படி, தேசிய அளவிலான வீரர்களை இலங்கை கிரிக்கெட்டின் ஊழியர்களாக வகைப்படுத்த ஸ்ரீலங்கா கிரிக்கெட் எடுத்த முடிவு மற்றும் உள்நாட்டு இறைவரி திணைக்களம் தங்கள் மீது வரியை விதிக்க எடுத்த முடிவு ஆகியவற்றை ரத்து செய்வதற்கு உத்தரவிடுமாறு மனுதாரர்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தைக் கோரியுள்ளனர்.

அத்துடன், இந்த மனு விசாரிக்கப்பட்டு இறுதி முடிவு அறிவிக்கப்படும் வரை உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் தீர்மானத்தைச் செயற்படுத்துவதற்கு இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்குமாறும் மனுதார்கள் கோரியுள்ளனர்.

இந்தநிலையில், குறித்த மனு இன்றைய தினம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவர் நீதியரசர் மொஹமட் லாபர் தாஹிர் மற்றும் நீதியரசர் கே.பி. பெர்னாண்டோ ஆகியோரடங்கிய நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில் அழைக்கப்பட்டது.

இந்தநிலையில், மனுவில் உள்ள விடயங்களை உறுதிப்படுத்துவதற்காக, மனுவை எதிர்வரும் 28 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு நீதியரசர்கள் ஆயம் தீர்மானித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....