உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி யாழ்ப்பாணத்தில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளது.
இன்று (19) பிற்பகல் யாழ் மாவட்ட செயலகத்தில், இந்த வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.
யாழ் மாவட்டத்தில் உள்ள 9 உள்ளூராட்சி மன்றங்களுக்குமான வேட்புமனு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.




