2025 ஆம் ஆண்டுக்கான சம்பியன்ஸ் கிண்ண இறுதி போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கான பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சம்பியன்ஸ் கிண்ணத்தை வென்ற இந்திய அணிக்கு 58 கோடி இந்திய ரூபாய்களை வழங்கவுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, வீரர்கள் மற்றும் பயிற்சியாளருக்கு 3 கோடி ரூபாவும் துணை பயிற்சி ஊழியர்களுக்கு 50 இலட்சம் ரூபாவும் வழங்கப்படும் என அந்த சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் அதிக முறை வெற்றிபெற்ற அணி என்ற சாதனையை இந்தியா அணி பெற்றுள்ளது.
கடந்த 2002 ஆம் மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரை இந்திய அணி வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.




