யாழை சேர்ந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் பாம்பு கடித்து உயிரிழப்பு

Date:

அநுராதபுரம், உடமலுவ காவல்துறையின் பிரதி பொறுப்பதிகாரியாகப் பணியாற்றி வந்த தலைமைக் காவல்துறை பரிசோதகர் நேற்று (22) பாம்பு கடித்து உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர், யாழ்ப்பாணம் – நயினாதீவி பகுதியில் வசித்து வந்த 59 வயதான அங்குல்கம கமுவகே சரத் தர்மசிறி என்ற காவல்துறை உத்தியோகத்தரே ஆவார்.

அநுராதபுரம் தலைமையக காவல்துறை வழங்கியுள்ள தகவல்களின்படி, தர்மசிறி ஒரு காலத்தில் அநுராதபுரம் தலைமையக காவல்துறையிலும் பணியாற்றியுள்ளதோடு, குற்றப் புலனாய்வுப் பிரிவின்” (SOCO) OIC ஆகவும் கடமையாற்றியுள்ளார்.

கடந்த 19 ஆம் திகதி மாலை வேலை முடித்து வீடு திரும்பிய தர்மசிறி, தனது பயிர் செய்கை நடவடிக்கைகளை கண்காணிக்க வீட்டின் பின்னால் உள்ள தோட்டத்திற்குச் சென்றிருந்த போது, வாழை புதருக்கு அருகில் ஒரு பாம்பு அவரைக் கடித்ததாகக் கூறப்படுகிறது.

பாம்பு கடித்த உடனேயே தர்மசிறி அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதனை தொடர்ந்து, அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு நான்கு நாட்கள் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....