நேரலையில் கணவன் தற்கொலை; தாயுடன் சேர்ந்து ரசித்த மனைவி

Date:

இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் இன்ஸ்டாகிராம் LIVE ஊடாக ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது,

மத்தியப் பிரதேசம், ரேவா மாவட்டத்தில் வசித்து வந்த சிவபிரகாஷ் திரிபாதி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிரியா சர்மாவை திருமணம் செய்து கொண்டார்.

மனஉளைச்சலில் நேரலையில் தூக்கிட்டு தற்கொலை
இவர்களுக்கு இரு மகள் இருக்கிறாள். ஆனால் பிரியாவுக்கு வேறொருவருடன் தொடர்பு இருப்பதை சிறுது காலத்திலேயே சிவப்பிரகாஷ் அறிந்து கொண்டார். இதனால் இருவருக்கும் இடையில் பிரச்சனை இருந்து வந்துள்ளது.

இதற்கிடையே ஒரு விபத்தில் சிவபிரகாஷ் படுகாயமடைந்த பின்னர் மனைவி பிரியா தனது பிறந்த வீட்டுக்கு சென்றுவிட்டார்.

இதனால் மனஉளைச்சலில் இருந்த சிவப்பிரகாஷ் கடந்த மார்ச் 16 ஆம் திகதி இன்ஸ்டாகிராம் LIVE ஸ்ட்ரீமிங் நேரலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

நேரலையில் தற்கொலைக்கு முன் பேசிய அவர், தனது மனைவியும் மாமியாரும்தான் தற்கொலைக்கு காரணம் என்றும் திருமண வாழ்க்கையால் தனது சந்தோஷத்தை இழந்துவிட்டதாகவும் கூறினார்.

சிவபிரகாஷ் தற்கொலை செய்துகொள்ளும் 44 நிமிடங்கள் இன்ஸ்டா நேரலையை அவரது மனைவி பிரியாவும், மாமியாரும் பார்த்துக்கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பாக வழகுபதவு செய்து விசாரித்து வந்த பொலிஸார் தற்போது மனைவியையும் மாமியாரையும் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....