பாடசாலை மாணவர்களில் 18 சதவீதமானோர் மனஅழுத்தத்தில்!

Date:

நாட்டில் உள்ள பாடசாலை மாணவர்களில் 18 சதவீதமானோர் மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதுடன் 22 சதவீதமானோர் தனிமைப்பட்டிருப்பதாகவும் ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளதாக சமூக சுகாதார விசேட வைத்தியர் சிரந்திகா விதான தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2024 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் 9.1 சதவீதமான பாடசாலை மாணவர்கள் தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாக உலகளாவிய பாடசாலை சுகாதார கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

தற்போது மாணவர்கள் மத்தியில் உளநலப்பிரச்சினைகள் அதிகரித்துள்ளதை அவதானிக்க முடிந்ததாகவும் சிரந்திகா விதான தெரிவித்துள்ளார்.

கடந்த 12 மாதங்களில் 22 சதவீதமானவர்கள் தனிமைப்பட்டுள்ளனர்.

12 சதவீதமானவர்கள் பிரச்சினைகள் காரணமாக சில சந்தர்ப்பங்களில் தூக்கமின்மையால் அவதியுறுகின்றனர்.

18 சதவீதமானவர்கள் மனஅழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

13 முதல் 17 வயதுக்கு இடைப்பட்டவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

7.5 சதவீதமானவர்களுக்கு நெருங்கிய நண்பர்கள் இல்லை என்பது பிரச்சினையாகக் காணப்படுவதாகவும் சிரந்திகா விதான குறிப்பிட்டுள்ளார்.

கையடக்க தொலைபேசி, சமூக ஊடக பாவனை, தனிமைப்படல் உள்ளிட்ட பல காரணங்களால் இந்த நிலைமை அதிகரித்துள்ளதாக சமூக சுகாதார விசேட வைத்தியர் சிரந்திகா விதான தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....