மியான்மர், தாய்லாந்து நிலநடுக்கம்; உயிரிழப்பு 10 ஆயிரத்தை கடக்கும் என பகீர் தகவல்!

Date:

மியான்மர், தாய்லாந்து நிலநடுக்கத்தில் உயிரிழப்போர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடக்கும் என அமெரிக்க ஆய்வு மையம் கூறிய தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மியான்மர், தாய்லாந்தில் நேற்று (28) இடம்பெற்ற நில அதிர்வால் இதுவரை உயிரிழந்தோடுர் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், இந்த கூறியுள்ளது.

இந்நிலையில் இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியுள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. மியான்மர், தாய்லாந்து ஆகிய நாடுகளில் நேற்று அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ரிக்டர் அளவில் 7.7 மற்றும் 6.4 ஆக பதிவான நிலையில், நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்து பெரும் சேதம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் மியான்மரில் சுமார் ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது.

மேலும் இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியுள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. அங்கு மீட்புப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் மியான்மர், தாய்லாந்து நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடக்கும் என நிலநடுக்கத்திற்கான அமெரிக்க ஆய்வு மையம் யு.எஸ்.ஜி.எஸ். கணித்துள்ளது.

அதேவேளை இன்று (29) மட்டும் 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். தற்போது மதியம் 2.50 மணியளவில் ரிக்டர் அளவில் 4.7 ஆக நிலநடுக்கம் பதிவானதாக நில அதிர்வு மையம் தகவல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....