இன்றைய ராசிபலன் 31 மார்ச் 2025

Date:

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் இன்று அயராது உழைப்பீர்கள். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் எதிர்பாராத நன்மை நடக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். சுறுசுறுப்புக்கு நீங்கள் சொந்தமாகி விடுவீர்கள். ஒரு துளி அளவும் சோர்வு இருக்காது. இறைவழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்க கூடிய நாள் இன்று.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோர்வான நாளாக இருக்கும். மனக்கவலையான நாளாக இருக்கும். வேலை சுறுசுறுப்பாக நடக்காது. இதனால் சின்ன சின்ன பின்னடைவுகள் உண்டாகலாம். மற்றபடி குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். பிள்ளைகளால் மனமகிழ்ச்சி இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டு.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற டென்ஷன் இருக்கும். கொஞ்சம் மன பயம் இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். சவாலான காரியங்களில் ஈடுபட வேண்டாம். அன்றாட வேலைகளை மட்டும் கூடுதல் கவனத்தோடு செய்தால் போதும். நேரத்தை அனாவசியமாக வீணடிக்காதீங்க. அடுத்தவர்களை பற்றி புறம் பேச வேண்டாம்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்று நிறைய நன்மைகள் நடக்கப்போகிறது. நேரத்தை சரியாக பயன்படுத்திக் கொள்வீர்கள். குறிப்பிட்ட வேலையை குறிப்பிட்ட நேரத்தில் முடித்துக் கொடுத்து, நல்ல பெயர் வாங்குவீர்கள். வாழ்க்கையில் முன்னேற தேவையான அத்தனை முயற்சிகளையும் மேற்கொள்வீர்கள். அது உங்களுக்கு வெற்றியையும் கொடுக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வேலையில் இருந்து வந்த டென்ஷன் குறையும். மேலதிகாரிகளுடைய ஆதரவு கிடைக்கும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். நீண்ட தூர பயணத்தை மட்டும் கொஞ்சம் தவிர்த்துக் கொள்ளவும். வண்டி வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் இரட்டிப்பாகும் நாள். நீண்ட நாள் பிரிந்த உறவுகள் ஒன்று சேரக்கூடிய நாள். துன்பங்கள் விலகக் கூடிய நாள். புது வாய்ப்புகள் தேடி வரக்கூடிய நாளாகவும் இருக்கும். வேலையில்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. நிதி நிலைமை சீராகும். கடன் சுமை குறையும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத வரவு இருக்கும். நீண்ட நாள் கடன் சுமை குறையும். கோர்ட்டு கேஸ் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பாகும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம், பெரிய பண பிரச்சனையை தீர்த்து வைக்கும். இன்று அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கப் போகிறது. குலதெய்வத்திற்கு நன்றி சொல்லுங்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசி காரர்கள் இன்று சுகபோக வாழ்க்கையை வாழ்வீர்கள். உங்களுக்கு தேவையான நல்லது, உங்கள் வீட்டு வாசலை தேடி வரும். தேவையற்ற டென்ஷன் எல்லாம் குறையும். தடைப்பட்டு வந்த சுப காரிய பேச்சுக்கள் வீட்டில் நடக்கும். சுப செலவுகள் உண்டு. அவமானப்பட்ட இடத்தில் தலை நிமிர்ந்து, உங்களுடைய பெயரை நிலை நாட்டுவீர்கள்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும். கையில் இருக்கும் சேமிப்பு கரைய வாய்ப்புகள் இருக்கிறது. வேலையில் கூடுதல் கவனம் தேவை. நேரத்தை வீணடிக்கக்கூடாது. வியாபாரத்தை பொருத்தவரை எடுக்கும் முடிவுகளில் நிதானம் தேவை. அனுபவசாலிகளுடைய பேச்சைக் கேட்டு நடக்க வேண்டும். அடம் பிடித்து எந்த காரியத்தையும் சாதிக்கக்கூடாது.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சிக்கல்கள் நிறைந்த நாளாக இருக்கும். சுலபமான வேலை கூட இழுபறியாக இருக்கும். முயற்சிகள் உடனடியாக வெற்றி கொடுக்காது. வியர்வை சிந்தி உழைக்கும் பட்சத்தில், நீங்கள் நிச்சயம் வெற்றியாளராக மாறலாம். உழைப்பதற்கு இன்று நீங்கள் தயங்க கூடாது.

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் இன்று எதிர்ப்புகளை தாண்டி வெற்றி அடையக் கூடிய நாளாக இருக்கும். போட்டி பொறாமைகள் நிறைந்த இந்த நாளை போராடி தான் கடந்து செல்ல வேண்டும். எதிரிகளுடைய தொல்லை இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் எதிர்பாராத போட்டியின் மூலம் சில மன உளைச்சல் நிறைந்த சம்பவங்கள் நடக்கலாம். கவனமாக இருக்கவும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கக்கூடிய நாளாக இருக்கும். மன நிறைவு கிடைக்கும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் உஷாராக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். மற்றபடி வேலை தொழில் எல்லாம் நீங்கள் நினைத்ததை விட நல்லபடியாக நடக்கும்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....