பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸாரை வீட்டுக்குள் இழுத்து சென்று தாக்குதல்;

Date:

திருகோணமலை மாவட்டத்தின் நிலாவெளி, உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அடம்போடை பகுதியில், வீதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பொலிஸார் தாக்கப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் நேற்று (31)இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

நிலாவெளி, உப்புவெளி அடம்போடை பகுதியில், தலைகவசம் அணியாமல் அதிக சத்தத்துடன் சென்ற மோட்டார் சைக்கிளை, வீதி பாதுகாப்பு பணியில் நின்ற பொலிஸார் நிறுத்த முயன்றபோது, ​​சந்தேகநபர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வாக்குவாத்தை அடுத்து சிலர் சேர்ந்து பொலிஸாரை வீட்டுக்குள் இழுத்து சென்று அடைத்துவைத்து தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

அத்துடன் பொலிஸாரின் கையடக்க தொலைபேசியை சேதப்படுத்தி, தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகவும் தெரியவந்துள்ளது .

சம்பவம் தொடர்பில் அடம்போடை பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டதாக தெரிவித்த பொலிஸார் , மேலும் பேர் தேடப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....