எரிபொருள் தாங்கிப் பாரவூர்தி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
பொலன்னறுவை – மட்டக்களப்பு பிரதான வீதியின் மன்னம்பிட்டி பகுதியில் இன்று (01) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த பாரவூர்தியில் 6,600 லீற்றர் பெற்றோல் மற்றும் 6,600 லீற்றர் டீசல் இருந்ததாகக் கூறப்படுகிறது.
விபத்துக்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை.
இந்த விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.




