கொழும்பு – மட்டக்களப்பு பிரதான வீதியின் கல்லேல்ல பகுதியில், வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்த காவல்துறை அதிகாரி மீது பேருந்து ஒன்று மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உயரிழந்த காவல் அதிகாரி கல்லேல்ல பகுதியில் தனது நண்பர்களுடன் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
உயிரிழந்த நபர் பொலன்னறுவை காவல்நிலையத்தில் பணிபுரியும் 55 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையாவார்
விபத்தின் பின்னர் பேருந்தின் சாரதி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், முதற்கட்ட விசாரணைகளின் பின்னர் அவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பில் பொலன்னறுவை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




