விதிகளை மீறும் சாரதிகள் தண்டப்பணத்தை செலுத்த புதிய டிஜிட்டல் செயலிகள் அறிமுகப்படுத்த தீர்மானம்!

Date:

போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு காவல்துறையினரால் வழங்கப்படும் தண்டப்பணத் தொகையை இணையவழி மூலம் செலுத்துவதற்கான திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

அதன்படி இந்த கொடுப்பனவுகளை GovPay செயலி மூலம் செலுத்த முடியும் என அவர் தெரிவித்தார்.

குருநாகலில் இருந்து அனுராதபுரம் செல்லும் வழியில் 11 இடங்களில் குறித்த திட்டத்தைச் செயற்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

அத்தோடு,பொதுமக்கள் அனைத்து அரசாங்கக் கட்டணங்களையும் டிஜிட்டல் முறையில் செலுத்த உதவும் வகையில், ‘GovPay’ வசதி உட்பட மூன்று புதிய டிஜிட்டல் செயலிகள் கடந்த பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் அறிமுகப்படுத்தப்பட்டது

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....