இந்தியத் துறைமுகம், விமானநிலையம் மற்றும் சுங்கத் திணைக்களம் ஊடாக பங்களாதேஷ் பொருட்கள் கொண்டு செல்ல மூன்றாம் தரப்பு நாடுகளுக்கு நுழையும் வாய்ப்பை ஏற்படுத்தும் பொருட்கள் பரிமாற்றம் செய்யும் வசதிகளை இந்திய அரசாங்கம் நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
2020ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வசதிகளின் காரணமாக டாக்காவில் ஏற்றுமதி – நேபாளம், பூட்டான், மியன்மார் ஆகிய அண்மை நாடுகளுக்கு சுமுகமாகப் பயணிப்பதற்கு உதவியுள்ளது.
மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் இந்த வசதியை நிறுத்துவதாக இந்தியா அறிவித்துள்ளது.
ஏற்கனவே போக்குவரத்தில் உள்ள பொருட்கள் முந்தைய நடைமுறையின் கீழ் இந்தியப் பகுதியை விட்டு வெளியேற அனுமதிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பங்களாதேஷ் இடைக்கால அரசின் பிரதான ஆலோசகர் முஹம்மட் யூனுஸ் இந்தியாவின் வடகிழக்கு பகுதி நிலத்தால் சூழப்பட்டதாகவும், பங்களாதேஷ் அதன் ஒரே கடல்வழி நுழைவாயில் என்றும் கூறியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த வலயத்தில் சீனா தனது பொருளாதார இருப்பை விரிவுபடுத்த வேண்டும் என சீனாவிற்கு நான்கு நாள் விஜயம் மேற்கொண்டபோது யூனுஸ் வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.




