அமெரிக்க வரி சவாலை எதிர் கொள்ள சர்வ கட்சி குழு அமைக்க ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
கட்சி தலவர்களுடனான மாநாட்டில் கலந்து கொண்ட தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் 44% வரி விதிக்க பட்டு, தற்போது இடை நிறுத்த பட்டடுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ள 90 நாள் இடைக்கால அவகாசத்தில், நிலைமை கண்காணித்து உரிய ஆலோசனைகளை முன்வைக்க, ஆளும் கட்சி, எதிர் கட்சி உறுப்பினர்களை உள்ளடக்கிய ஒரு ஆலோசனை குழு அமைக்க படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக மனோ கணேசன் கூறியுள்ளார்.




