கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் “ரெட்ரோ” திரைப்படம் எதிர்வரும் மே மாதம் 1 ஆம் திகதி வெளியாகவுள்ளது.
சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளதுடன் சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
ஏற்கனவே வெளியான இப்படத்தின் கண்ணாடி பூவே மற்றும் கனிமா ஆகிய பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிலையில், இப்படத்தின் புதிய பாடல் நாளை (12) வெளியாகும் என படக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
சந்தோஷ் நாராயணன் இசையில் சித் ஸ்ரீராம், யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்ட ஷான் வின்சன்ட் டி போல் மற்றும் சந்தோஷ் நாராயணன் ஆகியோர் இந்த பாடலை பாடியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.




