திருகோணமலை – கந்தளாய் பிரதான வீதியில் அக்போபுர 85 ஆவது மைல்கல் பகுதிக்கு அருகில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
இந்த விபத்தில் காயமடைந்த மேலும் 26 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கண்டி, மாவனல்ல, உயன்வத்த பகுதியில் இருந்து, 26 உள்ளூர் சுற்றுலாப் பயணிகளுடன் திருகோணமலை நோக்கிச் சென்ற தனியார் பேருந்து ஒன்றும், திருகோணமலையிலிருந்து பயணித்த இராணுவ பாரவூர்தி ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இந்த விபத்து நேர்ந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் கந்தளாய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், அவர்களது நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாவனல்ல பகுதியில் இருந்து திருகோணமலைக்குச் சுற்றுலா சென்றவரில் ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.




