நாவலப்பிட்டி – கலபொட நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற இளைஞன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக நாவலப்பிட்டி காவல்துறையினர் தெரிவித்தனர்.
நாவலப்பிட்டி Westall – Atheton பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞனே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
காணாமல் போன இளைஞர், நேற்று (17) காலை அவரது 4 நண்பர்களுடன் குறித்த நீர்வீழ்ச்சிக்குச் சென்றுள்ளார்.
இவர்கள் கலபொட நீர்வீழ்ச்சியின் பிரதான நுழைவாயிலில் முறையான அனுமதி பெறாமல், நீர்வீழ்ச்சியைப் பார்வையிடச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் காணாமல் போன இளைஞன் நீர்வீழ்ச்சிக்கு அருகிலுள்ள பாதுகாப்பற்ற இடத்தில் மூழ்கிக் காணாமல் போயுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
காணாமல் போன இளைஞனைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.




