கொட்டிகாவத்தையில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட நபரை 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க புதுக்கடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொட்டிகாவத்தை – நாகஹமுல்ல பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து 800 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 13 கிலோ 372 கிராம் ஹெரோயின் மற்றும் 3 கிலோ 580 கிராம் ஐஸ் ரக போதைப்பொருட்கள் என்பன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட நபர் புதுக்கடை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவரை 7 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.




