ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நாடு முழுவதிலும் பொய்களைக் கூறி வருவதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.
ஜனாதிபதி பொய்களைக் கூறுகிறார் என தென்னிலங்கை மக்களுக்கே தற்போது தெரியவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வவுனியாவில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு இதனைத் தெரிவித்தார்.
தற்போதைய அரசாங்கத்தினர் கோட்டாபய ராஜபக்ஷவை விட மிக மோசமான இனவாதிகள் என சாணக்கியன் குறிப்பிட்டார்.
சிங்கள பேரினவாத நாடாக தொடர்ந்தும் இலங்கையை வைத்திருப்பதே இவர்களின் நோக்கம் எனவும் தெரிவித்தார்.
அதற்குத் தடையாகத் தமிழரசுக் கட்சி மாத்திரமே உள்ளது எனவும் சாணக்கியன் சுட்டிக்காட்டினார்.
தமிழரசுக் கட்சி மாத்திரமே தமிழ் மக்களின் இருப்பை பாதுகாப்பதற்காக செயற்படுகிறது என சாணக்கியன் கூறினார்.




