2024 இலும் ரணிலே ஜனாதிபதி – மனுஷ உறுதி

Date:

நாட்டிலுள்ள சகல பிரச்சினைகளுக்கும் தீர்வை பெற்றுக்கொடுத்ததன் பின்னர் இன்னுமொரு தலைவரிடம் நாட்டை ஒப்படைக்கும் நிலைப்பாட்டிலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இருப்பதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளாா்.

 

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, எத்தனை முனைகளில் போட்டி ஏற்பட்டாலும் நாட்டு மக்களின் தேவைக்காக ரணில் விக்கிரமசிங்க மீண்டும் நாட்டின் ஜனாதிபதியாக நியமிக்கப்படுவார். அரசியல் நோக்கங்கள் வேறாக இருந்தாலும் நாட்டின் முன்னேற்றத்துக்காக கட்சி பேதமின்றி சகலரும் ஒன்றுப்பட்டுள்ளனா்.

 

ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் நாட்டின் ஜனாதிபதியாக நியமித்து நாட்டிலுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்கி எந்தவொரு கட்சியும் அரசியல் செய்யக் கூடிய நிலைமையை உருவாக்கியுள்ளாா்.

 

30 வருடகாலம் யுத்தம் உள்ளிட்ட நாட்டிலுள்ள பிரச்சினைகளை இன்னுமொரு ஜனாதிபதியிடம் ஒப்படைக்க ஜனாதிபதி தயாராக இல்லை. இந்த பிரச்சினைகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லவும் ஜனாதிபதிக்கு விருப்பமில்லை. அதற்காகவே கலந்துரையாடி தீர்வொன்றை எடுக்குமாறு நாங்கள் கோருகிறோம் என்றாா்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

முதல் 7இல் வெறும் 1.. அடுத்த 7இல் 6.. கம்பேக்கில் மேஜிக் நிகழ்த்திய ஆர்சிபி.. வேறு யாரும் செய்யாத 2 சாதனை

உச்சக்கட்டத்தை தொட்டுள்ள ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் 68வது லீக்...

கங்குவா தீபாவளிக்கு வெளியாகிறதா?

தென்னிந்திய திரையுலகில் புகழ்பெற்ற நடிகர் சூர்யா தற்போது 'கங்குவா' என்ற படத்தில்...