நிலவும் சீரற்ற வானிலையால் நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் விவசாய நிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
அத்துடன், பிரதான வீதிகள், விளையாட்டு மைதானங்கள் என்பனவும் நீரில் மூழ்கியுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் நீர் நிரம்பியதால் குறித்த வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நுவரெலியா – கண்டி, நுவரெலியா – ஹட்டன் போன்ற பிரதான வீதிகளின் போக்குவரத்தும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்




