ஆணொருவர் மர்மமான முறையில் மரணம்

Date:

வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டலடி – புளியன்கண்டலடி வீதியில் உயிரிழந்த நிலையில் ஆணொருவரின் சடலம் காணப்படுவதாக வாகரை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

39 வயதுடைய கதிரவௌி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த நபர் கடந்த 26ஆம் திகதி காலை கண்டலடியில் இறால் பிடிப்பதற்கு சென்றுவருவதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து வௌியேறிச் சென்றுள்ளதாக தெரியவருகிறது.

சடலம் தற்போது மரண விசாரணைகளுக்காக மட்டக்களப்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இது இயற்கை மரணமாக அல்லது கொலையா என்பது தொடர்பில் இதுவரையில் தகவல்கள் வௌியாகவில்லை.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....