முச்சக்கரவண்டியை திருடியவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது.

Date:

கொழும்பு – முகத்துவாரம் பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கொழும்பு வடக்கு குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய, மேற்படி பிரதேசத்தில் கொழும்பு வடக்கு குற்றத் தடுப்பு பிரிவினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேகநபர் 10 கிராம் 200 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார். 

கைதான சந்தேகநபர் 28 வயதுடைய ஹூரீகஸ்வெவ பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். 

சந்தேகநபரிடம் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணையில், கடந்த 24ஆம் திகதி தெஹிவளை பொலிஸ் நிலையத்தில் முச்சக்கரவண்டி திருட்டுச் சம்பவம் தொடர்பில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டுடன் தொடர்புடைய சந்தேகநபர் இவரென்பது தெரியவந்தது. 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முகத்துவாரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....