மைத்திரியிடம் சாட்சியம் பதிவு

Date:

2008 ஆம் ஆண்டு பொரலஸ்கமுவ பகுதியில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பான வழக்கில் சாட்சியாகப் பெயரிடப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று (28) சாட்சியம் பதிவு செய்யப்பட்டது.

2008 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி பொரலஸ்கமுவ பகுதியில் அப்போதைய விவசாய அமைச்சராக செயற்பட்ட மைத்திரிபால சிறிசேனவை கொல்லும் நோக்கில் தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு உதவியதாக இரண்டு பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ்.எஸ். சப்புவித முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, முன்னதாக பிறப்பிக்கப்பட்டிருந்த அழைப்பாணைக்கு அமைய சாட்சியாளரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீதிமன்றத்தில் முன்னிலையானார்.

அதன்படி, வழக்கில் முதல் சாட்சியாகப் பெயரிடப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சாட்சியம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....