இம்முறை வெசாக் மகோற்சவம் நுவரெலியாவில்

Date:

இம்முறை வெசாக் மகோற்சவத்தை நுவரெலியாவில் நடாத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அதிவணக்கத்திற்குரிய பௌத்த பிக்குமார்கள் மற்றும் ஒட்டுமொத்த புத்தசாசனப் பேரவையின்
ஆலோசனையின் பிரகாரம் 2569 (2025) ஆவது ஸ்ரீ பௌத்த வருடத்தின் வெசாக் மகோற்சவம்
புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சு, பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு மற்றும் பௌத்த விவகாரங்கள் திணைக்களமும் இணைந்து நுவரெலியா மாவட்டத்தை மையமாகக் கொண்டு நுவரெலியா சர்வதேச பௌத்த நிலைய விகாரையில் நடாத்துவது பொருத்தமானதெனக் கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாண்டு அரச வெசாக் மகோற்சவம் ‘ ஹஜெத மித்தே கல்யாண – ஹஜெத புரிசுத்தமே’ (நற்குணங்கள் கொண்ட உன்னத நண்பர்களுடன் பழகுவோம் ) எனும் தொனிப்பெருளின் கீழ் நடாத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கிணங்க, நுவரெலியா சர்வதேச பௌத்த நிலைய விகாரையை மையமாகக் கொண்டு தேசிய வெசாக் மகோற்சவத்தை நடாத்துவதற்கும், 2025 ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆம் திகதி தொடக்கம் 16 ஆம் திகதி வரை வெசாக் வாரமாகப் பிரகடனப்படுத்துவதற்கும், குறித்த காலப்பகுதியில் பல்வேறு பௌத்த மத நிகழ்ச்சித்திட்டங்களை ஒழுங்கமைத்து நடைமுறைப்படுத்துவதற்கும் பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் மற்றும் புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சர் ஆகியோர் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....