அமெரிக்க போர் விமானம் செங்கடலில் விழுந்து விபத்து:

Date:

பல கோடி மதிப்புள்ள அமெரிக்க போர் விமானம், செங்கடலில் விழுந்த விபத்தில் விமானி ஒருவர் காயமடைந்ததாக கடற்படை தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கில் இயங்கி வரும் இரண்டு அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்களில் ஹாரி ட்ரூமன் போர்க் கப்பலும் ஒன்றாகும். இந்த கப்பல் ஏமனில் ஹவுதி படையினருக்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

இந்நிலையில் ஹாரி ட்ரூமன் கப்பலில் இருந்த போர் விமானம் செங்கடலில் விழுந்து விட்டது. போர் விமானத்தை நகர்த்துவதற்கு பயன்படுத்தப்பட்ட டிராக்டரும் கடலில் விழுந்துவிட்டது. எப்/எ18 இ மாடலில் உருவான இந்த போர் விமானத்தின் மதிப்பு இந்திய மதிப்பில் 570 கோடி ரூபாய்.

போர் விமானம் செங்கடலில் விழுவதற்கு முன்பு, அதில் இருந்த வீரர்கள் வெளியேற துவங்கினார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. மீட்பு பணிகள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. 2021ம் ஆண்டில் ரூ.60 கோடியே 70 லட்சம் மதிப்புள்ள போர் விமானம் விபத்தில் சிக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....