15 வருட திருமணத்திற்கு புறம்பான உறவு கொலை செய்யப்பட்ட பெண்.

Date:

மொனராகலை , கதிர்காமம் , பெரகிரிகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நேற்று (01) பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் கதிர்காமம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கதிர்காமம் , பெரகிரிகம பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய பெண்ணொருவரே கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கொலை செய்யப்பட்ட பெண்ணும் சந்தேக நபரும் சுமார் 15 வருடங்களாக தகாத உறவில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில், கொலை செய்யப்பட்ட பெண் கடந்த சில நாட்களாக சந்தேக நபரிடமிருந்து பிரிந்து வாழ்ந்துள்ளார்.

இதனால் சந்தேக நபருக்கும் கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கும் இடையில் நேற்று வியாழக்கிழமை தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறின் போது சந்தேக நபர் குறித்த பெண்ணை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார்.

இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கதிர்காமம் , மயிலகம பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடையர் ஆவார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கதிர்காமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....