வேண்டியதெல்லாம் கொடுக்கும் குரு வழிபாடு.

Date:

இன்று குரு ஸ்தானத்தில் இருக்கும் ஒருவரை பற்றி தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். மும்மூர்த்திகளின் சங்கமம் என்று கூட இவரை சொல்லலாம். சிவன் பிரம்மா விஷ்ணு இந்த மூவரின் ஒன்று சேர்ந்த அவதாரமாக தான் இவரை சொல்கிறார்கள். தத்தாத்ரேயர் மகரிஷி. மனித ரூபத்தில் பூமியில் அவதாரம் எடுத்து, இறைவனிடம் சரண் அடைந்தவர்களை, வழிபாடை செய்தால் நினைத்தது உடனே பலிக்கும் என்பது ஒரு நம்பிக்கை. அந்த வகையில், இவரும் பூமியில் மனிதராக பிறந்த ஒரு மகான் தான். இவரை குருவாக ஏற்றுக்கொண்டு வேண்டிய வரங்களை கேட்டால் நிச்சயம் நம்முடைய வேண்டுதல் உடனே பலிக்கும் என்று சொல்கிறது சாஸ்திரம்.

அதற்கு, இவருடைய திருவுருவ படத்தை பூஜை அறையில் வைக்க வேண்டுமா? தினம் தினம் பூஜை செய்ய வேண்டுமா? அப்படி எல்லாம் எதுவுமே கிடையாது. இவரை மனதார நினைத்துக் கொள்ளுங்கள். மதியம் 12 மணியிலிருந்து 1 மணிக்குள் இவருடைய பெயரை ஒருமுறை சொல்லி, உங்களுடைய வேண்டுதலை இந்த பிரபஞ்சத்திடம் சொல்லிப் பாருங்கள்? உங்களுடைய வேண்டுதல் நிச்சயம் பலிக்கும். சொந்த வீடு கட்ட வேண்டும், கடன் சுமை குறைய வேண்டும், நல்ல வேலை கிடைக்க வேண்டும், ஆரோக்கியம் பெற வேண்டும், இப்படி எந்த வரம் உங்களுக்கு தேவை என்றாலும் சரி, மதியம் 12 – 1 மணிக்குள் வேண்டிய வரத்தை ஒரு முறை பிரபஞ்சத்துடன் சொல்லிவிட்டு ஓம் “ஸ்ரீ குரு தத்தா ஜெய குரு தத்தா ! ஓம் ஸ்ரீ குரு தத்தா ஜெய குரு தத்தா!” என்று சொல்லிவிட்டு “தத்தாத்ரேரே சரணம் சரணம் !” என்று ஒரு முறை ஒரே ஒரு முறை சொன்னாலே போதும்.

உங்களுடைய வேண்டுதலை இந்த தத்தாத்ரேயரே நிறைவேற்றி வைப்பார். தினமும் மேலே குறிப்பிட்டுள்ள அந்த ஒரு மணி நேரத்திற்குள் இந்த மகரிஷி பெயரை ஒரே முறை சொல்லுங்கள். வேண்டுதலையும் பிரபஞ்சத்திரம் சொல்லி விடுங்கள். இவ்வளவுதான் வழிபாடு.

மதியம் 12 மணியிலிருந்து 1 மணி வரை வெளியில் இருக்கிறீர்கள், அலுவலகத்தில் இருக்கிறீர்கள் என்றாலும் பரவாயில்லை. ஒரு நிமிடம் நேரத்தை ஒதுக்கி மனதை ஒருநிலைப்படுத்தி இவரை கூப்பிட்டு வேண்டுதலை சொல்லுங்கள். நிச்சயமாக உங்களுடைய குருவாக இவர் வந்து உங்கள் வாழ்க்கையை வழிநடத்திச் செல்வார். ஏதாவது ஒரு ரூபத்தில் உங்களுக்கு நல்லது நடக்கும். தொடர்ந்து 11 நாள் இந்த வழிபாட்டை முயற்சி செய்து பாருங்கள். வாழ்க்கையில் நம்பவே மாட்டீங்க. அத்தனை நல்லது உங்களை தேடி வரும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....