இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளுடன் முந்தைய மாலத்தீவு அரசு மேற்கொண்ட ஒப்பந்தங்கள் பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை,” என, அந்த நாட்டு அதிபர் முகமது முய்சு தெரிவித்துள்ளார். இதையடுத்து, ‘இந்தியாவுடனான நல்லுறவை சீர்குலைத்ததற்கு முகமது முய்சு, அந்த நாட்டிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என, எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
தெற்காசிய நாடான மாலத்தீவில், மக்கள் தேசிய காங்கிரசைச் சேர்ந்த முகமது முய்சு அதிபராக உள்ளார். கடந்த 2023ல் இங்கு நடந்த அதிபர் தேர்தலின் போது முகமது முய்சு, இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தார். அப்போது பல வாக்குறுதிகளையும் அளித்தார்.
முய்சுவும், அவரது கட்சி நிர்வாகிகளும், ‘மாலத்தீவில் ஆட்சி செய்தவர்கள், நாட்டின் இறையாண்மைக்கு எதிராக, இந்தியா உள்ளிட்ட நாடுகளுடன் பல ஒப்பந்தங்களை செய்துள்ளனர்; இது, மிகவும் கவலை அளிக்கிறது’ என்றனர்.
இந்நிலையில், பத்திரிகையாளர்களுக்கு முகமது முய்சு நேற்று ௧௫ மணி நேரம் பேட்டியளித்தார்.




