உலகளாவிய ரீதியிலுள்ள 1.4 பில்லியன் கத்தோலிக்கர்களின் புதிய தலைவர் சற்றுமுன்னர் வத்திக்கானின் சிஸ்டைன் தேவாலயத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்க நாட்டினை சேர்ந்த கர்தினார் ரொபர்ட் பிரீவோஸ்ட் புதிய பாப்பரசராக நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய திருத்தந்தையைத் தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்றும் வத்திக்கானில் உள்ள சிஸ்டைன் தேவாலயத்தில் நடைபெற்றது.
அதனை அடையாளப்படுத்தும் விதமாக, வத்திக்கானில் உள்ள சிஸ்டின் தேவாலயத்தின் மேல் பகுதியிலுள்ள குழாயிலிருந்து வெண்மையான புகை இன்று வெளியேறியுள்ளது.
அதன்படி, புனித பீட்டர் சதுக்கத்திற்கு மேலே உள்ள மாடியில் புதிய பாப்பரசர் தோன்றுவார் என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
புகைபோக்கியிலிருந்து வெள்ளை புகை வெளியேறியதால் புனித பீட்டர்ஸ் சதுக்கத்தில் கூடியுள்ள மக்கள் ஆரவாரம் செய்து தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
70 நாடுகளிலிருந்து வந்த 133 கர்தினால்கள் இந்த இரகசிய வாக்கெடுப்பில் பங்கேற்றனர்.
இது 2013 ஆம் ஆண்டில் நடைபெற்ற கடந்தக் கான்கிளேவ் கூட்டத்தில் பங்கேற்ற 48 நாடுகளிலிருந்து வருகை தந்த 115 கர்தினால்களைவிட அதிகமாகும் எனக் கூறப்படுகிறது.




