இந்தியா- பாகிஸ்தான் போர் நிறுத்தம் எதிரொலி காஷ்மீரில் திரும்பியது இயல்பு நிலை!

Date:

இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டதை தொடர்ந்து, காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பியது.

ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை கடந்த 7ம் திகதி அதிகாலை நம் படைகள் தரைமட்டமாக்கின.

இதில் ஆத்திரமடைந்த பாக்., ராணுவம், அன்று இரவே ஜம்மு – காஷ்மீர் எல்லையோர கிராமங்கள் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன்கள் வாயிலாக தாக்கியது. நான்கு நாட்களாக தொடர்ந்த இந்தியா – பாகிஸ்தான் மோதல், மேலும் தீவிரமாகும் என்பதற்கான அறிகுறிகள் தென்பட்ட நிலையில், திடீரென இரு தரப்பும் சண்டையை நிறுத்திக்கொள்ள சம்மதித்தன.

இந்நிலையில், இன்று (மே 11) காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பியது. பூஞ்ச், ஜம்மு உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் வழக்கம் போல் சாலையில் மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டது. சில தினங்களாக வெறிச்சோடிய சாலைகளில் தற்போது வழக்கம் போல் வாகனங்கள் செல்ல துவங்கியது. நேற்றிரவு ட்ரோன் மற்றும் ஏவுகணைகள் தாக்குதல் ஏதும் நடக்கவில்லை.

பஞ்சாப் மாநிலத்தில், பதான்கோட், பிரோஸ்பூர், அமிர்தசரஸ் ஆகிய இடங்களில் இயல்பு நிலை திரும்பியது. சாலைகளில் மக்கள் வழக்கம் போல் நடந்து செல்லும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. நேற்றிரவு ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் தாக்குதல் ஏதும் நடக்கவில்லை.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....