வங்கதேச கரன்சிகளில் முஜிபுர் படம் நீக்கம்:

Date:

நம் அண்டை நாடான வங்கதேசத்தில், இட ஒதுக்கீடு தொடர்பாக கடந்தாண்டு நடந்த மாணவர் போராட்டத்தைத் தொடர்ந்து, பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறினார்.

ஆட்சி கவிழ்ந்ததைத் தொடர்ந்து, ராணுவத்தின் தலையீட்டில், இடைக்கால நிர்வாக அரசு அமைந்துள்ளது. நோபல் பரிசு வென்ற பொருளாதார நிபுணர் முஹமது யூனுஸ், இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.

வங்கதேசம் உருவாவதற்கு காரணமான, வங்கதேச தந்தை என்றழைக்கப்படும் முன்னாள் பிரதமரான ஷேக் முஜிபுர் ரஹ்மானின் படமே, அந்த நாட்டின் டாகா எனப்படும் கரன்சிகளில் இடம்பெற்று வந்தன.

ஆனால், தற்போது, முஜிபுர் ரஹ்மான் தொடர்பான அனைத்து நினைவுகளும் அழிக்கப்பட்டு வருகின்றன.

ஷேக் ஹசீனாவின் தந்தையான முஜிபுர் ரஹ்மானின் படங்கள் இல்லாத புதிய கரன்சி நோட்டுகளை, இடைக்கால அரசு வெளியிட்டுள்ளது. இவை விரைவில் புழக்கத்துக்கு வரவுள்ளன. இவற்றில், கலாசார மற்றும் வரலாற்று அடையாளங்களை பிரதிபலிக்கும் படங்கள் இடம்பெற்றுள்ளன. தினாஜ்பூரில் உள்ள 18ம் நுாற்றாண்டைச் சேர்ந்த காந்தாஜி ஹிந்து கோயிலும் அதில் உள்ளது.

புதிய கரன்சிகள் 1000, 50 மற்றும் 20 ஆகிய மதிப்பில் வெளியிடப்பட உள்ளன. அதே சமயம் ஏற்கனவே உள்ள கரன்சி நோட்டுகளும் செல்லும்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....