தேசிய பொசன் வாரம் இன்று ஆரம்பம்

Date:

தேசிய பொசன் வாரம் இன்று (07) ஆரம்பமாகிறது.

அதன்படி, தேசிய பொசன் வாரம் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும், மேலும் தேசிய பொசன் பண்டிகை அனுராதபுரம் நகரம், மிஹிந்தலை மற்றும் தந்திரிமலை ஆகிய புனித தலங்களை மையமாகக் கொண்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தேசிய பொசன் விழாவிற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அனுராதபுரம் மாவட்ட செயலாளர் கே.பி.ஆர்.விமலசூரிய தெரிவித்தார்.

போசன் காலத்தில் பக்தர்களுக்குத் தேவையான வசதிகளை வழங்குவதற்காக ஒரு விசேட கைப்பேசி செயலியும் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காகவும், அனுராதபுரத்திற்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காகவும், வாகன நிறுத்துமிட வசதிகள் உள்ள இடங்கள், தானசாலைகள் (தன்சல்) நடைபெறும் இடங்கள், முதலுதவி மையங்கள் உள்ள இடங்கள் மற்றும் போக்குவரத்து நெரிசல் உள்ள இடங்கள் போன்றவற்றை உள்ளடக்கி இந்த செயலியை அறிமுகப்படுத்த எதிர்ப்பார்ப்பதாக கே.பி.ஆர். விமலசூரிய மேலும் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....