சித்துப்பாத்தி மனிதப்புதைகுழியில் இதுவரை 19 மனித எலும்புக்கூடுகள் மீட்பு

Date:

யாழ் – அரியாலை, சித்துப்பாத்தி இந்துமயானத்தில் காணப்பட்ட மனிதப்புதைகுழி ஆரம்பகட்ட பரீட்சாத்த அகழ்விலிருந்து இன்றுடன் 19 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடையாளம் காணப்பட்ட 19 எலும்புக்கூடுகளும் புதைகுழியில் இருந்து வெளியே எடுக்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்டுள்ள 19 எலும்புக்கூடுகளும் சட்டவைத்திய அதிகாரி செல்லையா பிரணவனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், சட்ட வைத்திய அதிகாரி குறித்த எலும்புக்கூடுகளை நீதிமன்றின் பாதுகாப்பில் வைப்பிலிடுவார் என்றும் சட்டத்தரணி ரணித்தா ஞானராஜா தெரிவித்தார்.

யாழ்- அரியாலை, சித்துப்பாத்தி இந்துமயானத்தில் காணப்பட்ட மனிதப்புதைகுழி பரீட்சாத்த அகழ்வு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதிபதி ஆ.ஆனந்தராஜாவின் மேற்பார்வையில் இன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த பரீட்சாத்த அகழ்வுப் பணியானது இன்றுடன் தற்காலிகமாக நிறைவுறுத்தப்படுகிறது.

இந்த மனிதப் புதைகுழி அகழ்வுப்பணியானது மேலும் 45 நாட்களுக்கு நீடித்து நீதவான் ஆ.ஆனந்தராஜா நேற்று அனுமதி அளித்திருந்தார்.

45 நாட்களுக்கான அகழ்வுப்பணிக்கான பாதீடு இன்று சட்டவைத்திய அதிகாரி செல்லையா பிரணவன், யாழ் நீதவான் நீதிமன்ற நீதபதியிடம் ஒப்படைத்துள்ளார்.

இதற்கமைய அடுத்த மூன்றாம் கட்ட அகழ்வுப்பணிக்காக உத்தேச திகதியாக ஜூன் 26ம் திகதி நீதவான் அனுமதித்துள்ளார்.

குறித்த உத்தேச திகதிக்குள்ளாக சமர்பிக்கப்பட்ட பாதீட்டின் நிதி கிடைக்கப்பெற்றால் மூன்றாம் கட்ட அகழ்வுப்பணி உத்தேச திகதியில் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....